
அலுவலகத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் முகமாக உற்பத்தி நாள் நிகழ்ச்சி 08.02.2019 அன்று பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக அலுவலகத்தின் அனைத்து பிரிவுகளினாலும் மேடை நாடகங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. இந்நிகழ்வில் சிறந்த மேடை நாடகத்தை தெரிவு செய்தல், அலுவலகத்தில் சிறந்த அலுவலரை தேர்ந்தெடுத்தல், சிறந்த கிராம சேவகர் அலுவலகத்தை தேர்ந்தெடுத்தல், அலுவலகத்தின் சிறந்த பிரிவை தெரிவு செய்தல் போன்ற சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன.
பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் ,கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.















